Wednesday, January 4, 2012

வலை வீசும் மீன்கள்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




அன்பு காட்ட அம்மாவா,கண்டிப்பு காட்ட அப்பாவா, 

நல்வழிப்படுத்தும் போது ஆசிரியரா,ஆறுதல் அளிக்கும் 

ஆண்டவனா எனக்காக எல்லா நேரமும் ஏதாவது ஒரு 

அவதாரம் எடுத்துக்கிட்டே இருக்கியேடி..லவ் யூடி ஹனி..



நான் ஏதாவது செய்து உன்னை சந்தோஷப்படுத்துறேன்..

நீ எதுவுமே செய்யாமையே என்னை சந்தோஷப்படுத்துற..

அது தான்டி ஹனி உன்னோட ஸ்பெஷல்..




உன்னிடம் கவிதை பேசி காதலிக்க எனக்கு ஆசை தான்..

ஆனால்,நான் ஆரம்பிக்கும் முன்னரே ஆயிரம் கவிதைகள்

சொல்கின்றனவே உன் கண்கள்..




மீன்களுக்கு வலைவீசி பார்த்திருக்கிறேன்..ஆனால் மீன்களே 

வலை வீசுவதை உன்னிடம் தான் கண்டேன்..நான் என் காதல் 

கொண்டு உன்னை சிறை பிடித்தால்,நீ என்னை கண்களில் 

சிறை பிடிக்கிறாயடி கள்ளி




என்னிடம் நீ என்ன எதிர்பார்ப்பாய் என்று தெரிந்து பூர்த்தி 

செய்கிறேன் நான்..ஆனால் நீயோ ஒவ்வொரு முறையும் 

என்னை வியப்பில் ஆழ்த்துகிறாய்..# அப்பன் கிட்ட போட்டு 

விட்டுட்டா சார்..




என் மீது தெரியாமல் பட்டதற்கு நீ மன்னிப்பு கேட்கிறாய்..

இதற்காக தவமிருக்கும் நான் நன்றி அல்லவா சொல்ல

வேண்டும்..தேங்க்ஸ் ஹனி..




தேவதை ஒன்று கனவில் தோன்றி உன் உயிரை ஏழுகடல்,

ஏழுமலை தாண்டி கிளியின் உடலில் பாதுகாக்கவா என்றது..

அது ஏற்கனவே 500 km தாண்டி அம்பத்தூர் எஸ்டேட் பக்கத்தில 

ஒரு கிளிகிட்ட தான் இருக்குனு சொல்லிட்டேன்..




உன் அன்பினால் நான் தடுமாறி விடுவேனோ என்று

கவலைப்படுகிறாய்..பைத்தியக்காரி…தடம் மாறி சென்ற 

நான் திருந்தியதே உன் அன்பினால் தானேடி..




என் கோபத்தினை நான் மவுனத்தில் காட்டுகிறேன்..நீ உன் 

காதலை மவுனத்தில் காட்டுகிறாய்..#நீ என்னுடன் பேச

தயங்குவதற்கும்,நான் உன்னுடன் பேசிக்கொண்டே 

இருப்பதற்கும் இப்போது தான் அர்த்தம் புரிகிறது..



எப்போதும் எதிர்காலத்தை எண்ணியே கவலைப் படுகிறாய் நீ..
நான் நிகழ் காலத்தில் சற்றே சந்தோஷமாக வாழ்வோமே
என்கிறேன்..லவ்யூடி ஹனி..

No comments: