Thursday, January 26, 2012

மாத்தி யோசி .. 57

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க





எத்தனை பொண்ணுங்ககிட்ட கேவலப்பட்டாலும் அடுத்த பிகரை 

நோக்கி எப்போதும் என்னை இயக்கிக்கொண்டு இருக்கும் ஒரு 

காரணம் "ஊருக்குள்ள இவ மட்டும் தான் பிகரா..? போடி.."




ஆத்திரப்பட்டு குரலை உயர்த்தி கொத்தவால்சாவடி போல 

ஆக்குறதை விட..ஸ்மைல் பண்ணி வாதிடும்போது சாந்தோம் 

சர்ச் போல சந்தோஷமா இருக்கு.




அடுத்தவங்களுக்கு என்னை பிடிக்கலையே னு வருத்தப்பட்டதை

விட,எனக்கு என்னை பிடிக்கிற மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சதுக்கு

அப்புறம் நிறைய பேருக்கு என்னை பிடிக்குது..



பிரெண்ட்ஷிப்பும்,புகைப்பழக்கமும் ஒண்ணு..பழகிட்டா சீக்கிரத்தில 

விட முடியாது.காதலும்,சரக்கும் ஒண்ணு.ஒரு முறை வாந்தி 

எடுத்துட்டா உடனே தொட பிடிக்காது.




அடுத்தவங்க எப்படிப் பட்டவங்கனு யோசிக்கிறதுக்கு முன்னர் 

நாம எப்படிப் பட்டவன் னு யோசிச்சா பல பிரச்சினைகள் தீரும்..

எவன் கேட்குறான்..



கண்களால் காயப்படுத்தினால் அவள் காதலி..கை,கால் 

உடையும் அளவுக்கு காயப்படுத்தினால் அவள் மனைவி..

#பக்கத்து வீட்டு அங்கிளுக்கு செம அடி..




எல்லாருக்குள்ளையும் காதல் இருக்கு..அதை வெளிக்கொண்டு 

வர்ற அந்த ஒருத்தர் யாருன்னு தேடிக்கண்டுபிடிக்கிறது 

தான் சுவாரசியம்..



தப்பு நம்ம மேல இருந்தா தான் விட்டுக்கொடுக்கனும்னு 

அவசியம் இல்ல..கொஞ்சம் புத்தி இருந்தாலே போதும்..

#வீணாய்ப் போனவனுங்க கூட எதுக்கு விவாதம்..



வானம் போல மனசு இருந்தா நல்லவனாம்..அதுல மேகம் 

போல் தினமும் புதுசா பெண்கள் வேணும்னு நான் கேட்டா 

மட்டும் கெட்டவனாம்..#என்னாங்கடா உங்க நியாயம்..



ஆறுதல் சொல்றவனுக்கு பிரச்சினை வரும் வரை தான் 

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லுவான்.உங்க மேல 

நம்பிக்கை வைங்க மக்களே.





1 comment:

சேகர் said...

குப்புற படுத்து யோசித்து பார்த்துவிட்டேன்..