Thursday, September 1, 2011

ஏன் இப்படி ... Part 30

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க


பிடிக்காதவர்கள் நம்முடன் இருக்க ஆசைப்படும்போது

சகிப்புத்தன்மையோடும்,நமக்கு பிடித்தவர்களுடன் 

இருக்க பொறுமையோடும் இருக்கிறோம்..




சாப்பிட்டு 4 நாள் ஆச்சுங்கனு சொல்ற பிச்சைக்காரன்கிட்ட 

ஏனப்பா பசிக்கலையானு கேட்பது போல இருக்குது I LOVE YOU 

சொல்ற ஆண்கள் கிட்ட செருப்பு பிஞ்சிடும்னு சொல்ற 

பொண்ணுங்களை பார்த்தா..




எல்லாத்தையும் இழக்கிறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல..

ஆனா யாருக்காக இழக்கிறோம்..அவர்களை 

கண்டுபிடிப்பதே கடினம்..




கோபத்தில் பேசிய வார்த்தைகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு

கிடைத்தாலும் பெண்களிடம் கிடைக்காது..

வார்த்தைகள் முக்கியம் வாலிபப்பசங்களா…




அவரவர் கவலையே 1000 இருக்கையில்..

அடுத்தவர்களை காயப்படுத்துவது அவசியம் தானா…


பல நேரங்களில் தொல்லை பேசியாய் இருப்பது பெண்கள் 

அழைப்பு வந்ததும் கிள்ளைப் பேசியாய் மாறிவிடுகிறது..

# கொஞ்சிக்கொஞ்சி பேசுறாளுங்க சார்..




காலையில் திட்டு வாங்கிக்கொண்டே தாமதமாக எழுவது 

எனக்கு இங்கும் தொடர்கிறது..அம்மாவுக்கு பதிலாக இங்கே 

அறை நண்பர்கள்..#செய்ங்கடா..செய்ங்க..




வாழ்க்கையும் விளையாட்டு தான் போல..பல நேரங்களில் 

ஆண்களின் ஆட்டத்தையும் சேர்த்து பெண்களே 

விளையாடிவிட்டு போயிடுறாங்க..

நாங்க பாவம் பொண்ணுங்களா




ட்ரீட் வைக்கிறேன்னு கூட்டத்தோட குடிக்கப்போறவனுக்கு 

மிஞ்சுறது கொஞ்சம் மிக்சரும்,கோவணமும் தான்..




நான் கட்டம் கட்டுற பொண்ணுங்க எல்லாம் என்னோட 

சாய்ஸ் ஆகவும்,அதுங்கு தடங்களா வர்ற எல்லாமும் 

கடவுளோட சவாலாவும் இருக்கு..

#யோவ்..அப்புறம் ஏன்யா அந்த பொண்ணை 

என் கண்ணுல காட்டுற..