அட இந்த உளறலை நீங்க
வது ஆளா பார்க்குறீங்க
என் அலுவலக நண்பர் திரு.நடராஜபெருமாள் அவர்களுக்கு இன்று
திருமணம் நடைபெறுவதை ஒட்டி அவருக்காக
இதோ எனது வாழ்த்துக்கள்..
இதை படிக்கும் நீங்களும் அவர்களை வாழ்த்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
தனிமை சிறகுகளை கொண்டு
பறந்து திரிந்த நண்பன்..
இனி சந்தோஷ சிறகுகளை கொண்டு
குடும்ப வானில் பறக்க போகிறான்..
இந்த தேவதையுடன்…
பூக்கள் நிரம்பிய பூமியில்…
தனக்கான ரோஜாவை இன்று
கண்டுக்கொண்டான்…
தன் வானில் வானவில்லாய் ..
மார்கழியில் இளஞ்சூரியனாய் ..
மழை நேர தேநீராய்..
நுரையீரல் சுவாசமாய்…
சொர்க்கத்தின் பாதியாய்…
மகிழ்ச்சியின் மீதியாய்…
ரயில் பயணத்தில் ஜன்னலோரமாய்…
வாழ்க்கை முழுதும் அவனுடன் பயணிக்க..
இதோ அவன் சக ( லமுமான ) பயணி ( ஜனனி ) ..
நண்பர்களும் நல்ல எண்ணங்களும் போல...
உறவுகளும் மகிழ்ச்சிகளும் போல..
தமிழர்களும் விருந்தோம்பலும் போல...
நீங்கள் இருவரும் என்றும்
இணைந்தே இருக்க..
தேவதைகள் பரிசளித்த இந்த
தருணத்தில்..
வானத்து தேவர்கள் ஆசியுடன்
உறவினர்களின் ஆசிர்வாதங்களோடு..
நண்பர்களின் வாழ்த்துக்களும்..
என்றும் அன்புடன்..
4 comments:
இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்...
#நீ எப்படா சிக்குவ 3G...??
//இதை படிக்கும் நீங்களும் அவர்களை வாழ்த்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..//
//கருத்து சொல்லணுமா வா வந்து சொல்லு.. சொல்லிப்பாரு//
பயமா இருக்கே!
நடராஜ் ஜனனி இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சகாதேவன்
வாழ்த்தியவர்களுக்கும் வாழ்த்தபோகிறவர்களுக்கும் நன்றி..
//கருத்து சொல்லணுமா வா வந்து சொல்லு.. சொல்லிப்பாரு//
// பயமா இருக்கே..! //
அதெல்லாம் பயப்படாதீங்க..நான் வெறும் பில்டப் தான்..
#நீ எப்படா சிக்குவ 3G...??
ஹ்ம்ம்..நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்.. நம்ம ஊருல 4 ,5 கல்யாணம் பண்ண அனுமதி இல்லையாம்ல..அதுவுமில்லாம எனக்குள்ள நிரம்பி வழியுற காதலை ஒரே ஒரு பொண்ணு நிச்சயம் தாங்க மாட்டா..அதனால தான் பகிர்ந்து கொடுக்கணும்னு நினைக்கிறேன்..அன்பின் அழுத்தம் அப்படி..
//நான் வெறும் பில்டப் தான்..//
அது தெரியும் மாப்பு :)
//அன்பின் அழுத்தம் அப்படி..//
அழுத்தம் அதிகமானா வெடிச்சிடும் மாப்பு ...பார்த்து மாப்பு :)
(அன்ப சொன்னேன்)
Post a Comment