Tuesday, February 14, 2012

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க



காதலர் தினத்திற்காக என்னுடைய ஒரு காதல் கதை எழுதலாம்னு 

தான் இருந்தேன்.. அதான் எல்லாரும் காரி காரி துப்புறாங்களே.. 

சரி வேணாம்னு விட்டுட்டேன்..


ஆனா அரிப்பெடுத்த கை சும்மா இல்லாம கவிதை எழுதியே 

ஆகணும்னு அடம் பிடிக்குது..என்ன பண்ண..

உங்க தலை எழுத்து..


இந்த கவிதையை போன மாதம் பிறந்த நாள் கொண்டாடிய 

ஒரு தேவதைக்கு பிறந்த நாள் பரிசா கொடுக்கணும்னு நினைத்தேன்..

ஆனா தேவதை தரிசனம் கடைசி நேரத்தில தான் கிடைத்தது..

அந்த பரபரப்பில விட்டாச்சு..


சரி..காதலால் நிரம்பி இருக்குற இந்த பூமியில எல்லா நாளும் 

காதல் தினம் தானே.. பரிசை இன்னைக்கு கொடுத்துட்டேன்..



என் கண்ணீர் துளிகள் உலர்ந்து போக தென்றல் காற்றாய்  

வந்தவளே.. இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

 
காயமுற்றுக் கிடந்த என் கற்பனைக் குதிரையை

கவிதைப்பிரதேசங்களை நோக்கி பயணிக்கச் 

செய்த பாவையே.. இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


அலை இன்றி அமைதியாய் இருந்த என் கடல்..

இன்று நீ வந்ததும் ஆரவாரமாய் ஆர்ப்பரிக்கின்றதே..


ஒளி இழந்து கிடந்த என் தனிமை உன்னைக் கண்டதும் 

சூரியனை விடவும் அதிகமாய் பிரகாசிக்கின்றதே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


எனக்கென பிறந்த தேவதை நீ இருக்க நானோ இத்தனை 

நாளாய் ஊரெல்லாம் தேடித் திரிந்தேன்..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

 
மழைத்துளி போல நான்..எங்கோ சேற்றில் விழுந்து சகதியாய் 

மாற இருந்த என்னை உன் கைகளில் ஏந்தி கங்கைக்கு 

நிகரான புனிதத்தன்மை தந்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

 
என்னை விரும்பும் ரோஜா நீ இருக்க நானே விரும்பி சில 

முட்களின் பின்னால் சென்று காயப்பட்டு இருக்கிறேன்..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


மேலே சென்ற பொருட்கள் எல்லாம் பூமியை வந்தடைவது 

அதன் புவி ஈர்ப்பு விசையால் எனில்..எங்கு சென்றாலும் நான் 

உன்னை வந்தடைவது உன் விழி ஈர்ப்பு விசையால்..


நீ என்னிடம் உதடுகளால் பேசியதை விட , உன் விழிகளால் 

பேசியதே அதிகம்..மவுன மொழியை எனக்குக் கற்றுத்தந்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


உன்னுடன் உரையாடி முடிக்கும் ஒவ்வொரு முறையும் 

என் காது மடல்களில் கற்கண்டு சுவை..நீ தந்த 

செல்போன் முத்தத்தினால்..


உன்னைக் கண்டபின் என் நுரையீரல் காற்றை சுவாசிக்க வில்லை..

உன் காதலைத் தான் சுவாசிக்கிறது..


கவலைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னை உன் 

காதல் என்னும் கட்டுமரம் கொண்டு கரை சேர்த்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

கண்ணாடியில் முகம் பார்த்தாலும் என் முகம் தெரிவதில்லை..

காதல் வழியும் உன் முகம் தானடி தெரிகிறது..


உன் விழி ஆயுதங்கள் மாறி மாறி தாக்குகிறது என்னை..

கலவரம் வரும் முன் தயவுசெய்து உன் இதழ்களின் ஈர 

முத்தத்தால் அடக்கி விடு..


உன் ஸ்பரிசத்தின் சுகம் உணர நானே மழையாய் மாறி 

வருவேன்..தயவு செய்து ஒதுங்கி விடாதே..


எனக்குள் இருந்த என்னைத் தேடிக்கண்டுபிடித்தவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..


என் உறக்கத்தைக் கெடுத்துவிட்டு நீ நிம்மதியாக

உறங்குகிறாய்..உறங்குவது நீ அல்ல..என் உலகம்..


நீ என்னுடன் இருக்கும் இரவில் மட்டும் என் வானில் 

இரண்டு நிலா..உன்னையும் சேர்த்து..
ஆயிரம் மலர்களின் மென்மையை உன் ஐந்தரை அடிக்குள் 

ஒளித்து வைத்துக்கொண்டவளே..

இத்தனை நாள் எங்கிருந்தாயடி..

ஒரு உடலினுள் இரு உயிர்கள் வாழ முடியுமா..? ஆம்..

தாயின் கருவில் இருக்கும் சிசு..எனக்குள் இருக்கும் நீ..


என் இதயத்தினுள் நீ நுழைந்தது என் இதயத்தை 

அலங்கரிக்கவா இல்லை அபகரிக்கவா..?


காற்றின் திசைக்கு ஏற்ப ஆடும் தீபம் போல..நானும் நீ 

இருக்கும் திசை நோக்கியே இருக்கிறேன்..

நான் சன் பிளவர் அல்ல.. உன் பிளவர்..

No comments: