Wednesday, June 1, 2011

அமுதம் வேண்டாம்..உன் அருகாமை போதும்




நான் உயிர் வாழ உன் சுவாசக்காற்று போதும்..

மெல்லிசை கேட்கவேண்டுமெனில் உன் 

சிரிப்பொலி போதும்..

சந்தோஷம் நான் காண உன் முகம் ஒன்றே போதும்..

என் தாகம் தீர்க்க உன் ஈரக்கூந்தலில் சொட்டும் நீர் போதும்..

வசந்த காலமாய் உன் வருகை போதும்..

அமுதமாய் எனக்கு உன் அருகாமை போதும்..

வேண்டிய வரங்கள் இது போதும்..

என்னை பிரியாதே நீ ஒரு போதும்..


உன்னோடு எப்போதும் நான் இருக்க வேண்டும் 

என்று ஆசைப்படவில்லை..

எனக்கு பதில் வேறு யாரும் இருக்கக்கூடாது 

என்றே தவிக்கிறேன்..



உன்னை காதலித்தபோது இனிமையாய் இருந்த 

உன் நினைவுகள் நீ பிரிந்த பின்பு 

இமயமாய் கனக்குதடி..



நீ நீ தான்..ஆனால் நீ என் நீ.. 

நான் நான் தான் ஆனால் நான் உன் நான்.. 

காதல் என்பது அழகினால் வருவது 

என்று நினைத்தேன்.. 

என் அன்பினால் உன்னை அடையும் வரை..