செடியில் முதன்முதலாக பூ பூத்ததையும்,
பக்கத்து வீட்டு மனிதர் முதன்முதலாக சிரித்ததையும்,
உடல் மீது முதல் மழைத்துளி விழுந்ததையும்
விழாவென கொண்டாடுகிறோம்..
# ஆம் நாங்கள் ஆண்ட்ராய்ட் யுக மனிதர்கள்..
எனக்கு அடுத்தவங்களைப் பத்தி புறம்
பேசுறவங்களைப் பார்த்தாலே அருவெறுப்பா இருக்கும்..
அப்படியா மச்சி என்றவனிடம் சொன்னேன்..
ஆமாம்டா.. கிளார்க் ரவி என்ன பண்ணான் தெரியுமா...?????
கண்ணு மண்ணு தெரியாம அப்படி என்ன குடி
வேண்டி இருக்கு.. இவனுங்களால தான்டா குடிக்கிற
அத்தனை பேருக்கும் அசிங்கம்னு சொல்லிட்டு கீழ
குனிஞ்சி தேடிக்கிட்டு இருக்கேன்.. என் வேட்டியை...
எவ்ளோ வெயில் அடிக்குது..பாவம் மக்கள்னு
பரிதாபப் படுற நான் தான்.. கொஞ்சம் முன்னாடி
பசிக்குதுனு கை ஏந்திய மூதாட்டியை
தவிர்த்து விட்டு வந்தவன்..
ABCD கூட தெரியலையா உனக்குனு கலாய்ச்சேன்
பக்கத்து வீட்டு பாப்பாவை.Candy crush level 70 ல
திணறிக்கிட்டு இருந்தேன்.போனை வாங்கி கேமை
முடிச்சிட்டு என்னைப் பார்த்தா பாருங்க
ஒரு பார்வை..!!!
வேணாம் விடுங்க..
வள்ளுவர் என்ன சொல்லி இருக்கார்
தெரியுமானு ஆரம்பிச்ச தாத்தாகிட்ட,
பாட்டி என்ன வாங்கிட்டு வர சொன்னாங்கனு
ஞாபகம் இருக்கானு கேட்டேன்..
நடுங்கிட்டார்..
திருக்குறள் < திருமதிகுரல்...????