Tuesday, August 30, 2011

அனிச்சை செயல்

அட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க




அலட்சியப்படுத்தலின் வலியை இன்று தான் உணர்ந்தேன்..

உன் அன்பின் அருகாமை இனி கிடைக்காது என்று தெரிந்தவுடன்..



நேரம் சில சமயங்களில் புன்னகையை மறக்க செய்கிறது.

சிலரின் புன்னகை நேரத்தை மறக்க செய்கிறது..

# நீ சிரிச்சா தீபாவளி..




தொலைவில் இருக்கும்போது வெறும் தோழியாக மட்டுமே 

இருக்கும் நீ..அருகினில் வந்ததும் அன்னையாய் மாறி 

உன் அன்பினில் நெகிழ வைக்கிறாய்..




நான் இருக்க தவிக்கும் இடத்தில் என் புத்தகங்கள்..

உன் மடியில்..

படிக்கட்டில் பரிதவித்தபடி நான்..




தனியாக நடப்பது கொடுமை அல்ல..

உன்னுடன் சேர்ந்து நடந்த பாதைகளில் நான் மட்டும் 

தனியாக நடப்பதே கொடுமை..




இப்போதெல்லாம் உன்னை நினைப்பது அனிச்சை 

செயலாகி விட்டது…

காதல் பொங்கும் தருணங்களில்..

2 comments:

மயில் றெக்க said...

நான் இருக்க தவிக்கும் இடத்தில் என் புத்தகங்கள்..

உன் மடியில்..

படிக்கட்டில் பரிதவித்தபடி நான்..

இதை தவிர மற்றவை எல்லாம் மிகவும் நன்றாக உள்ளது
இன்னும் கொஞ்சம் பூடகமா சொல்லி இருக்கலாம்
எப்படின்னு எனக்கு தெரியாது மச்சி

Unknown said...

இந்த உளறல் தான் அனிச்சை செயளா ? சரியான மொக்க
சரியான பதிவை பதிவு செய்தால் நன்றாக இருந்திருக்கும்
இப்படிக்கு
தமிழ் நேசன்